Suntec City மொத்த தளத்தையும் வாங்கிய வெளிநாட்டவர் – கொடுத்த தொகை $38.8 மில்லியனாம்!

Huttons Group

சன்டெக் சிட்டி டவர் 2இன் (Suntec City Tower 2) 30வது தளம் முழுவதையும் சுமார் $38.8 மில்லியனுக்கு வெளிநாட்டவர் ஒருவர் வாங்கியதாக Huttons Group தெரிவித்துள்ளது.

அந்த அலுவலக இடம் சுமார் 11,743.52 சதுர அடி கொண்டது, அதாவது ஒரு சதுர அடிக்கு சுமார் $3,300 விலை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியான செய்தி: கோழி ஏற்றுமதி மீதான தடையை ஓரளவு நீக்கிய மலேசியா!

“சன்டெக் சிட்டி டவர் 2இல் முழுத் தளத்திற்கும் சதுர அடி அடிப்படையில் இதுவரை கொடுக்கப்பட்ட விலைகளில் இது மிக உயர்ந்த விலையாகும்” என்று Huttons அறிக்கை கூறியது.

சீன நாட்டை சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், மெரினா பேயில் தடையற்ற காட்சியை பார்க்க விரும்பியதாக ஹட்டன்ஸ் குழுமத்தின் மூத்த பிரிவு இயக்குநர் அரிக் லிம் கூறினார்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய கலப்பு-பயன்பாட்டு கட்டிடங்களில் சன்டெக் சிட்டியும் ஒன்றாகும். இது ஒரு ஷாப்பிங் மால், ஐந்து அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஒரு மாநாட்டு நிலையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து: குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதி!