சிங்கப்பூர் தீர்ப்பு வழங்க வேண்டும் – இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை வழக்கில் இழுத்து விட்ட அமேசான்

amazon frl future dragged reliance retail

இந்தியாவின் ரிலையன்ஸ் ரீடெயில் உடன்,ஃப்யூச்சர் ரீடெய்லின் ரூ.24,500 கோடி இணைப்பு ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தை அணுகுவதற்கு இரு தரப்பினர்களும் ஒப்புக்கொண்டதால், அமேசான்- ஃபியூச்சர் இடையேயான வழக்கை கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் நடுவர் மன்றத்திற்கு அமேசான் FRL -ஐ இழுத்த பிறகு ,அமேசான் மற்றும் ஃப்யூச்சர் நிறுவனம் ,ரிலையன்ஸ் ரீடெய்ல் உடன் FRL-ஐ இணைப்பதற்கான வழக்கில் ஈடுபட்டுள்ளன .

இந்தியாவில் அபார வளர்ச்சி அடைந்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்கதாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ஆவார்.உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் 10வது இடத்தை பெற்ற முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் உடன் FRL- ஐ இணைப்பது தொடர்பான வழக்கை அமேசான் மற்றும் ஃப்யூச்சர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்ச்சையில் ஈடுபட்டுள்ளன.

உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான் நிறுவனத்துடன் ஃப்யூச்சர் நிறுவனத்திற்கு ஏற்கனவே இருந்த சர்ச்சையை சிங்கப்பூர் நடுவர் மையம் தீர்த்து வைத்தது. தற்பொழுது சமீபத்திய ஒப்பந்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளை சர்வதேச மையத்தில் அணுகுவதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதால் இது சாத்தியமானதாகவும் தகவல்கள் கூறுகின்றன