சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி சவாரிகளுக்கான கட்டணம் உயர்வு – பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் கட்டணம்

All taxi operators to raise their fares in March
TODAY

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் டாக்ஸி பயணங்களுக்கான அதிக கட்டணம், வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் எதிர்வரும் வியாழன் (May19) முதல் ஜூன் 30 வரை $3 உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் கட்டணத்துடன் சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணங்களுக்கு ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் இரவு 11:59 வரை கூடுதலாக $8 வசூலிக்கப்படும்.

மற்ற அனைத்து நேரங்களிலும் கூடுதலாக $6 செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கூடுதல் கட்டணம் மாலை 5 மணி முதல் இரவு 11: 59 மணி வரை $5 செலவாகும். மற்ற எல்லா நேரங்களிலும் $3 செலவாகும்.

சிங்கப்பூரின் மிகப் பெரிய டாக்ஸி ஆபரேட்டரான ComfortDelGro Taxi வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், அதிகரிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணம் சாங்கி விமான சரக்கு மையம்,விமான நிலைய காவல் நிலையம், மற்றும் சிங்கப்பூரின் விமான நிலைய பூங்கா போன்றவற்றில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

மே 19ஆம் தேதி தொடங்கும் கூடுதல் கட்டண உயர்வு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி அளவில் முடிவடையும். சாங்கி விமான நிலையம் வழியாக மார்ச் மாதத்தில் சுமார் 1.14 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு covid-19 தொடங்கியதிலிருந்து தற்பொழுது முதல்முறையாக பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருதல் மற்றும் டாக்ஸிகளின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் போன்றவை விமானநிலையத்தில் மக்களை நீண்ட வரிசையில் காத்து நிற்க வழிவகுக்கிறது