சிங்கப்பூர் சென்ற உரிமையாளர் – ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டிய நிறுவன ஊழியர்கள்!

Jalan Sultan fight
(Source: WALB)

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், குளிர்சாதன பெட்டி தயாரிப்பு செய்து வருகிறது.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான நாகவர்தன், கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். பின்னர் அந்த நிறுவன பொறுப்பு அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிங்கப்பூர் சட்டத்தை மீறிய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறைத்தண்டனை

அதாவது கணக்காளர் சத்யா, ஆடிட்டர் கந்தவடிவேலு ஆகியோர் இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, உரிமையாளரான நாகவர்தன் கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். இந்நிலையில், நிறுவன கணக்கு வழக்குகளில் ஏதோ குளறுபடி இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்த குளறுபடியை தொடர்ந்து நாகவர்தன், வங்கியில் விசாரித்துள்ளார். அப்போது தான் உண்மை தெரியவந்துள்ளது.

நாகவர்தன் வங்கி கணக்கு, கணக்காளர் சத்யாவின் கைபேசி எண்ணுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சத்யா போலி கையொப்பம் போட்டு, பணம் கையாடல் செய்த‌தும் உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கணக்காளர், ஆடிட்டர் ஆகியோர் சேர்ந்து ஒரு கோடி மற்றும் 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த‌து தெரிய வந்தது.

இந்நிலையில், இருவரும் கைதாகியுள்ளனர்.

குடும்பங்களை பிரிந்து, பல இன்னல்களை கடந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – “கவனித்துக்கொள்ள முழு சமூக முயற்சியும் தேவை”