ஒமைக்ரான் அச்சம்: சிங்கப்பூருக்கு விமானம் செல்வதில் சிக்கல்

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டு வந்தது.

கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய அச்சம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச போக்குவரத்தில் தடைகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை

தற்போது கோவையில் இருந்து அமீரக சார்ஜாவிற்கு மட்டும் ஏர் அரேபியா தினசரி விமான சேவை இயங்கி வருகிறது.

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் டிசம்பர் 29ஆம் தேதி ஸ்கூட் விமானம் சேவையை துவங்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், ஒமைக்ரான் கிருமி வகை பரவல் அதிகரிக்கும் சூழலில், இந்த சேவை மீண்டும் துவங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

10 நாடுகளுக்கான கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர் – இனி அவர்கள் சிங்கப்பூர் பயணிக்கலாம்!

இது பற்றி கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறுவது என்ன?

கோவை மற்றும் சிங்கப்பூர் வழித்தடத்தில் மீண்டும் விமான சேவை தொடங்குவது குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பு மட்டும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில், கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில், முன்னர் திட்டமிட்டப்படி கோவை-சிங்கப்பூர் இடையே விமான சேவை தொடங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

“விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் மட்டுமே, சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்'” என்று அதிகாரிகள் கூறினர்.

திருச்சி-சிங்கப்பூர் இடையே தினசரி இண்டிகோ விமான சேவை!