தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியுமா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே! – tamilnadu to singapore bike travel

tamilnadu to singapore bike travel
tamilnadu to singapore bike travel

tamilnadu to singapore bike travel | தமிழநாட்டிலிருந்து 7000 கிமீ மேல் பயணித்த பின் சிங்கப்பூரை அடைய முடியும். வெளிநாடுகளில் மோட்டார் சைக்கிள் இயக்கிட, நடப்பில் உள்ள இந்தியா லைசென்ஸ் உடன் International Driving Permit வாங்கிட,  Transport Department, Govt of Tamil Nadu, India – ல் சில விபரங்கள் பெறலாம். உங்கள் அருகில் உள்ள பிராந்திய போக்குவரத்து அலுவலகம் சென்றால் கூடுதல் விபரங்கள் கிடைக்கும்.

சென்னை, விஜயவாடா, ராஜமுந்திரி, தர்மவரம், தேட்டகுந்தா சந்திப்பு, தாண்டவா ரிவர் பிரிட்ஜ், வெம்படு டோல் பிளாசா, நரசிங்கப்பள்ளி, கங்காவரம், ஸ்ரீகாகுளம், புவனேஷ்வர், பாலசோர், பூர்னியா, சிலிகுரி, குவாஹாடி, கோஹிமா, இம்ஃபால், மோரெ – தாமு, (இந்தியா – மியான்மர் சர்வதேச எல்லை) , மியா வாடி மே சாட் (மியான்மார் – தாய்லாந்து சர்வதேச எல்லை), பாங்காக் தாய்லாந்து , புக்கிட் காயு ஹிட்டாம் (தாய்லாந்து – மலேஷியா சர்வதேச எல்லை), பினாங், பந்தர் ஜோஹோர் பாரு (மலேஷியா – சிங்கப்பூர் சர்வதேச எல்லை) வழியாக  சிங்கப்பூரை அடையலாம்.

வழியில் அடர்ந்த வனப்பகுதி, மலைப்பகுதி, காட்டு விலங்குகளின் நடமாட்டம் , ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகள், தீவிரவாதி ஊடுருவல் இருக்கலாம்.

மியான்மர் எல்லை பகுதிகளில் சில இடங்களில் பயங்கரவாதம் , இராணுவ கெடுபிடி, கிளர்ச்சியாளர்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற சில நடவடிக்கைகள் அவ்வப்போது நடக்கும். அந்த பகுதிகளில் எச்சரிக்கையாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாட்டு எல்லையை கடக்க வேண்டி இருப்பதால், அதற்கான அனுமதி, விசா பெற சென்னையில் உள்ள தென் இந்தியா ஆட்டோமொபைல் அஸோஸியேஷனை  அணுகலாம்.