முதன்முறையாக தமிழ் பாரம்பரிய கலாச்சாரம் பொறிக்கப்பட்ட டைட்டன் கடிகாரம் அறிமுகம்..!

நாம் நன்கு அறிந்த டைட்டன், தங்களது 35 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, தமிழகத்தை போற்றும் விதமாக ‘தமிழ்’ எழுத்துகள் மற்றும் தொன்மையான கலாச்சாரம் பொறிக்கப்பட்ட ‘தமிழ்நாடு கலெக்சன்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளின் கொண்டாட்டம்” என்று டைட்டன் கூறும் இந்த தொகுப்பு, ஏழு கடிகாரங்களை உள்ளடக்கியது.

அதன் வடிவமைப்புகள் தமிழகத்தின் வளமான கோயில் பாரம்பரியம், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சீவரம் பட்டு புடவைகளை போற்றும் விதமாக வெளியிட்டுள்ளது.

டைட்டனின் வணிகத்திற்கு 12 சதவீத மிகப்பெரிய பங்களிப்பை தமிழக மாநிலம் தந்துள்ளது” என்று டைட்டனின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் கூறினார், “எனவே, நாங்கள் தமிழகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தோம்?” என்று கூறினார்.

அதன் வெளிப்பாடு தான் இந்த தமிழ் கலாச்சாரம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள்.

டைட்டனின் தமிழ்நாடு கலெக்சன் விலை ரூ.4,495 முதல் ரூ.6,995 வரை உள்ளது, தமிழ்நாட்டில் உள்ள ஷோரூம்கள் அனைத்திலும் ஆன்லைனில் கிடைக்கும்.

X