சிங்கப்பூர் சுற்றுலா விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது? Tourist Visa Singapore

singapore tourism

Tourist Visa Singapore | சிங்கப்பூர் சுற்றுலா வீசா வழங்குவதற்கென்றே சென்னையில் சில அங்கரிக்கப் பெற்ற சுற்றுலா முகவர்கள் உள்ளனர். அவர்கள் கேட்கும் ஆவணங்களை நாம் கொடுத்தால், இரண்டு நாட்களில் சிங்கப்பூரின் சுற்றுலா Plain Paper ஈ-வீசா வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  1. ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடி (வாலிடிடி) உள்ள பாஸ்போர்ட் மற்றும் அதன் காபி

2. ரிடர்ன் டிக்கேட்

3. குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய்கள் கொண்ட மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு வங்கி ஸ்டேட்மெண்ட்டின் காபி அல்லது சிங்கப்பூரில் வசிக்கும் உங்கள் நண்பரின் வேலை பர்மிட் நம்பர், அவருடைய விலாசம் மற்றும் வங்கி ஸ்டேட்மெண்ட்டின் காபி

4. சிங்கப்பூரில் நீங்கள் தங்கப் போகும் இருப்பிடத்தின் விலாசம்

5. இதற்கு முன் சிங்கப்பூர் சென்றதற்கான விவரங்கள்