திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஊழியர்… வலுக்கட்டாயமாக மடக்கி வண்டியில் ஏற்றிசென்ற மர்ம நபர் – திக் சம்பவம்

"சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க" - சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற பயணி வந்துள்ளார்.

பின்னர் அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு செல்வகுமார் வெளியே சென்றுள்ளார். அவரை அழைத்து செல்ல அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் வெளியே காத்திருந்துள்ளனர்.

வாகனத்தில் சடலமாக இறந்து கிடந்த ஓட்டுநர் – இயற்கைக்கு மாறான மரணம் குறித்து விசாரணை

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் செல்வகுமாரை மடக்கி பிடித்து ஆட்டோ ஒன்றில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

ஆட்டோவில் செல்வகுமாரை ஏற்றி செல்வதை அறிந்த குடும்பம், ஆட்டோவை மறிக்க முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது பற்றி விமான நிலைய போலீசிடம் புகார் கொடுத்தனர்.

அதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரை விமான நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கண்டறிந்தனர்.

இந்த விசாரணையில், பல தகவல்கள் வெளியாகின. துபாயில் இருந்து வந்த செல்வகுமாரிடம் 150 கிராம் தங்கம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நகையை சோதனை பயத்தில் கழிவறையில் அவர் வீசியதாகவும், இந்நிலையில் அதனை பெற்றுக்கொள்ள வந்த இப்ராஹிம் என்ற மர்ம நபர் அவரை மடக்கி பிடித்ததும் தெரிய வந்தது.

மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!