எப்பொழுது கையெழுத்தான உடன்பாடு? – அமலுக்கு வந்த சிங்கப்பூர் – பிரிட்டன் உடன்பாடு

UK Brittain singapore agreement execute

நேற்று சிங்கப்பூர்-பிரிட்டன் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க மின்னிலக்க வர்த்தக உடன்பாடு அமலுக்கு வந்தது. எல்லை தாண்டிய தரவுப் பதிவுகளுக்கான தரவு பாதுகாப்பு மற்றும் தரவு நிலை ஆகியவற்றை வகுக்க இந்த பொருளியல் உடன்பாடு வழிவகுக்கிறது.

இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட போதிலும்,தேவையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தற்போதுதான் நிறைவு பெற்றுள்ளன.சிங்கப்பூரின் துணை பிரதமர் ஹெங் சுவீ கியத் லண்டன் மாநகரில் ‘லண்டன் டெக் வீக்’ என்ற மாநாட்டில் பங்கேற்ற போது இந்த உடன்பாடு நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.

சிங்கப்பூர் ஏற்கனவே, இது போன்ற உடன்பாட்டை ஆஸ்திரேலியா,சிலி,நியூசிலாந்து மற்றும் தென்கொரியா ஆகியவற்றுடன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.எனினும் பிரிட்டனுடனான மின்னிலக்க வர்த்தக உடன்பாட்டை சிங்கப்பூர் ஏற்படுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

நாடு விட்டு நாடு பணம் அனுப்பும் பயனர்களுக்கு பெரிய அளவிலான இணைய பாதுகாப்பு இந்த உடன்பாட்டின் மூலம் கிடைக்கும்.மோசடி,தவறாக வழிநடத்துதல் போன்றவற்றில் பயனாளர்கள் சிக்கிக் கொள்ளாதவாறு பயனாளர்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை இந்த உடன்பாட்டில் பெறலாம்.