“சிங்கப்பூரில் ஒரு துறை அடிவாங்கினாலும், இன்னொன்றில் பிழைத்துக்கொள்ளலாம்” – நம்பி வந்த தொழிலாளர்களை மோசம் செய்யாத சிங்கப்பூர் அரசின் திட்டம்!

Singapore's top business chamber has urged employers to retrench workers only as a last resort
(PHOTO: Reuters)

சிங்கப்பூர் பொருளாதாரமானது ஏற்றுமதியை பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியின் காரணமாக ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது.

விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்கு ஆசியாவில் மூன்றாவது மிக உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் அரசு முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது.

தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாகும்.

சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும்.

ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.