உலக புகழ்மிக்க வலி நிவாரணி சிங்கப்பூர் டைகர் பாம் – சிறப்பு பார்வை !!

100 ஆண்டுகளுக்கும் மேலாக உலக புகழ் மிக்க இந்த டைகர் பாம் தைலத்தை சிங்கப்பூரில் ஹவ் பர் ஹெல்த்கேர் (Haw Par Healthcare) நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது, இதில் சீன ரகசியங்களைப் போன்றே ஒரு “இரகசிய” மூலிகை சூத்திரம் இதில் பயன்படுத்தப் படுகிறது.

சீன மூலிகை மருத்துவரான ஆவ் கின் 1870 களின் ரங்கூனில், எங் அவுன் டோங் என்ற சிறிய மருந்துக் கடையை அமைத்தார். அங்கு, அவர் தனது சிறப்பு களிம்பை தயாரித்து விற்பனை செய்து வந்தார், இந்த தைலம் அனைத்து வகையான வலிகளை நீக்கும் நிவாரணியாக விளங்கியது.

1908 ஆம் ஆண்டு ஆவ் கின் உயிரிழந்தார், அதன் பிறகு ​​அவரின் இரண்டு மகன்களான ஆவ் பூன் ஹாவ் (அதாவது ‘மென்மையான புலி’) மற்றும் ஆவ் பூன் பர் (அதாவது ‘மென்மையான சிறுத்தை’) அவர்கள் இருவரும் வியாபாரத்தை சிங்கப்பூருக்கு எடுத்துச் சென்று, தங்கள் களிம்பை மலாயா, ஹாங்காங், படேவியா, சியாம் போன்ற சீனாவிலும், சீனாவின் பல்வேறு நகரங்களுக்கும் வெற்றிகரமாக விற்றனர். முதலில் ஆவ் பூன் ஹாவ் தனது தயாரிப்புகளுக்கு டைகர் பாம் என்று பெயரிட்டார்.

குறிப்பாக ஆசிய நாடுகளில் அதிகம் வரவேற்ப்பை பெற்ற இந்த டைகர் தைலத்தை பயன்படுத்தாதோர் இல்லை, என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி டைகர் பாம் ஆகும்.

இந்த டைகர் பாம் தைலத்தில் கற்பூரம், மிளகுக்கீரை எண்ணெய், கிராம்பு எண்ணெய், மென்ட்ஹோல் மூலிகை பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன.

இந்த டைகர் பாம் ஒவ்வொரு வருடமும் 70 நாடுகளுக்கு மேலாக, சுமார் 20 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.

இந்த டைகர் பாம் முதுகு வலி, மூட்டு வலி, விறைப்பு, சுளுக்கு, பூச்சிகள் கடி, சளி, நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் ரத்த கட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான வலி நிவாரணத்திற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

You cannot copy content of this page