“நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்” பட்டய கிளம்பும் பிகில் பட பாடல்!

Vijay turns singer for 'Verithanam', second single drops from 'Bigil'

மெர்சல் திரைப்பட பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ராஹ்மான், விஜய் – அட்லீ கூட்டணியில் இணைந்திருக்கும் திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன்முறையாக பாடியிருக்கிறார். வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாடலை இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியிட்டது. இந்நிலையில், பாடல் வரிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக “கருப்பா கலையா இருப்போம், ஒன்னா உசுரா இருப்போம், புள்ளைங்க இருக்காங்க வேற என்ன வேணும்” உள்ளிட்ட வரிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பாடல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகிவருகிறது.