ராஜாராணி சீரியல் ஷூட்டிங் இனி சிங்கப்பூரில் நடக்க போகுது…

தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொடர்களில் ஒன்று விஜய் டிவி -யின் ராஜாராணி தொடர். இந்த தொடரில் நடித்துவரும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மனசா இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு பரவி வந்தன. இதை முற்றிலும் பொய் என்று ஆரம்ப காலங்களில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மறுத்து வந்தனர்.

இதனை அடுத்து சமீபத்திய விஜய் டிவி டெலிவிஷன் ஆவார்ட் நிகழ்ச்சியில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு தங்களின் அதிகார்வ பூர்வ திருமண அறிவிப்பை ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் ராஜாராணி தொடர் சூட்டிங் இனி சிங்கப்பூரில் நடைபெறும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆலியா மனசா. அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ‘ராஜாராணி ஷூட் இனி சிங்கப்பூரில் நடக்க போகுது” என்று கூறியுள்ளார், உடன் சஞ்சீவ் இருந்தார்.

காதல் ஜோடியான இருவரும் நடிக்க இருக்கும் இந்த தொடரின் இனி வரும் பகுதிகள் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.