ஜூவல் சாங்கியில் கோலாகலமாக நடைபெற்ற “சிங்கே” 50வது பொன்விழா.!

Pic: Lee Hsien Loong

சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் கோலாகலமான சிங்கே அணிவகுப்பு நேற்று (பிப்ரவரி 12) வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சிங்கே அணிவகுப்பு விழாவானது, இந்த ஆண்டு அதன் 50வது பொன்விழாவைக் கொண்டாடியது. இதனை முன்னிட்டு, அங்கு பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ”….குறைவான நாடுகள் பங்கேற்பு – இந்திய போர் விமானம் “தேஜஸ்” இடம்பெறுமா?

அனைவரையும் ஈர்க்கக்கூடிய கண்கவர் படைப்புகளைக் கொண்ட இந்த சிங்கே நிகழ்வு அதன் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செயப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் நான்கு இனத்தவரின் திருமண சடங்குகளைச் சித்திரிக்கும் அங்கம் உட்பட பல்லின சமுதாயப் படைப்புகள் இடம்பெற்றிருந்தது.

சிங்கே அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. லீ சியென் லூங் மற்றும் அவரது மனைவி, அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிங்கே அணிவகுப்பில் முதன் முறையாக இடம்பெறும் 17 சிறிய மிதவைகள், தீவெங்கும் உள்ள சுமார் 14,000 குடியிருப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிப். 14 முதல் தடுப்பூசி தகுதியை தக்க வைத்துக்கொள்ள அலைமோதும் கூட்டம்…!