‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot). குறிப்பாக, தமிழகத்தின் திருச்சி, கோவை ஆகிய இரு நகரங்களில் இருந்து இரு மார்க்கத்திலும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை அந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் சொத்து நிர்வாகத்துறையில் ஊதிய உயர்வு – கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையில் பணியாளர்கள்

குறிப்பாக, கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே ஸ்கூட் நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A320neo என்ற விமானத்தை இயக்கி வருகிறது விமான நிறுவனம். மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும், விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் லாட்டரி வாங்கும் குரூப் – பரிசுத்தொகை ரூ.25 கோடி விழுந்தால் எப்படி கிடைக்கும்?

கோவை நகரம் தொழில் நிறைந்த நகரம் என்பதால், வர்த்தகர்கள் தங்கள் தொழில் தொடர்பாக சிங்கப்பூருக்கு சென்று வருகின்றனர். இதனால், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களின் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.