“உக்காந்து எத்தனை ரயில் போகுதுனு எண்ணினால் வேலை” – லட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்த தமிழக ஊழியர்கள்

"உக்காந்து எத்தனை ரயில் போகுதுனு எண்ணினால் வேலை" - லட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்த தமிழக ஊழியர்கள்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வேலை தொடர்பான மோசடியில் சுமார் 28 ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வந்து செல்லும் ரயில்களை நாள் கணக்கில் எண்ணினால் வேலை உறுதி என்பதை நம்பி, உக்காந்து எண்ணிக்கொண்டிருந்த 28 ஊழியர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய இரயில்வேயில் வேலை பெறுவதற்கான பயிற்சி இது என்று அவர்கள் நம்பி எண்ணிக்கையை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு முடியவில்லை, இதில் பாதிக்கப்பட்டவர்கள் 2,00,000 ரூபாய் மற்றும் 2.4 மில்லியன் ரூபாய் வரை வேலைக்காகச் செலுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு நவம்பரில் இந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கியது, ஆனால் செய்தி கடந்த வாரம்தான் வெளியானது.

தென் தமிழகத்தைச் சேர்ந்த அந்த ஊழியர்கள், டெல்லியில் உள்ள பிரதான ரயில் நிலையத்தின் வெவ்வேறு நடைமேடைகளில் ஒரு மாதத்திற்கு தினமும் எட்டு மணி நேரம் நிற்கும்படி மோசடி கும்பல் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதனை கேட்டு அவர்கள் ரயில் நிலையத்தின் வழியாக ஒவ்வொரு நாளும் செல்லும் ரயில்களை எண்ணினர் என்று கூறப்பட்டுள்ளது.

சிலர் இதற்காக கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.