இந்த 6 கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி விமான நிலைய ஓய்வறைகளுக்கு இலவச அனுமதி பெறலாம்.

இந்த 6 கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி விமான நிலைய ஓய்வறைகளுக்கு இலவச அனுமதி பெறலாம்.

1. DBS ALTITUDE VISA CREDIT CARD
2. CITI PREMIERMILES VISA CARD
3. AMERICAN EXPRESS SINGAPORE AIRLINES KRISFLYER ASCEND CREDIT CARD
4. STANDARD CHARTERED VISA INFINITE CREDIT CARD
5. HSBC VISA INFINITE CARD
6. OCBC VOYAGE CARD

1.DBS ALTITUDE VISA CREDIT CARD:

DBS Altitude Visa Card ஒரு சிறந்த அந்தஸ்து பெட்ரா நுழைவு கார்டு, இதற்கு ஆண்டு வருமானமாக $30,000 இருக்கவேண்டும். வருடத்திற்கு இரண்டு இலவச விமான ஓய்வறை பெறமுடியும். ஆனால் அதற்கு உங்கள் கிரெடிட் கார்டை அஞ்சலில் பெறும் தருணத்தில் நீங்கள் முன்னுரிமை பாஸ் லவுஞ்ச்கு விண்ணப்பித்திருக்கவேண்டும்.

2. CITI PREMIERMILES VISA CARD:

இந்த கார்டு பயன்படுத்துபவர்கள் ஒரு முன்னுரிமை பாஸ் பெறுகிறார்கள். இது உலகின் எந்த விமான நிலையத்திலும் ஆண்டுக்கு இரண்டு முறை முன்னுரிமை பாஸ் விமான நிலைய ஓய்வறைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. இதை இரண்டு தனித்தனி வருகையிலும் பயன்படுத்தலாம் அல்லது விருந்தினருடனும் பயன்படுத்தலாம்.

கூடுதல் வருகைகளுக்கு 27 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படும், மேலும் இது உங்கள் CITI PREMIERMILES VISA கார்டிலிருந்து வசூலிக்கப்படும்.

3. AMERICAN EXPRESS SINGAPORE
AIRLINES KRISFLYER ASCEND CREDIT CARD:

இந்த கார்டின் உறுப்பினர்கள் சிங்கப்பூரில் பங்கேற்கும் SATS Premier ஓய்வறைகள் மற்றும் உலகில் உள்ள அனைத்தும் Plaza Premium ஓய்வறைகள் ஆகியவற்றிற்கு 4 வவுச்சர்கள் பெறலாம் .

4.STANDARD CHARTERED VISA INFINITE CREDIT CARD:

STANDARD CHARTERED VISA INFINITE CREDIT கார்டு சிங்கப்பூரில் மிகவும் பிரத்யேகமான ஏர் மைல் கிரெடிட் கார்டுகளில் ஒன்றாகும். இது DBS Altitude Cards மற்றும் Citi PremierMiles Visa Card போன்றது. நீங்கள் இதன்மூலம் complimentary Priority Pass membership பெறுவீர்கள். ஆனால் இது Visa Infinite Card என்பதால், உறுப்பினர்கள் ஆண்டுக்கு 2 பதிலாக 6 விமான நிலைய ஓய்வறைகளுக்கு இலவச வருகைகளைப் பெறுகிறார்கள்.

ஆறாவது வருகைக்கு பின்னர் எந்த ஒரு வருகைக்கும் ஒரு நபருக்கு $38 வசூலிக்கப்படும்.

5. HSBC VISA INFINITE CARD:

இந்த கார்டு உறுப்பினர்கள் அவர்களின் கிரெடிட் கார்டு ஒப்புதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடனடியாக ஒரு பிரெஸ்டீஜ் முன்னுரிமை பாஸ் உறுப்பினர் அட்டையைப் பெறுவார்கள். இது உலகளவில் முன்னுரிமை பாஸ் ஓய்வறைகளுக்கு வரம்பற்ற அனுமதியை பெற்றுத்தரும், மேலும் ஒரு வருகைக்கு ஒரு விருந்தினருக்கு $35 மட்டுமே வசூலிக்கப்படும்.

6. OCBC VOYAGE CARD:

குறைந்தபட்சம் $120,000 வருடாந்திர வருமானம் பெறுபவர்கள் இந்த OCBC Voyage  கார்டு பெறலாம்.

இந்த கிரெடிட் கார்டு ஆண்டு முழுவதும் வரம்பற்ற விமான நிலைய ஓய்வறைகளுக்கு
அனுமதி வழங்குகிறது.மேலும் அட்டைதாரர்கள் உலகெங்கிலும் உள்ள 70 விமான நிலைய ஓய்வறைகளுக்கு அனுமதி பெறுவார்கள் மற்றும் ஒரு Plaza Premium உறுப்பினராகவும் தகுதி பெறுவார்கள். இது குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாக நினைக்க வேண்டாம், இவை அனைத்தும் VIP ஓய்வறைகள், எனவே நீங்கள் மிக உயர்ந்த ஆடம்பரத்தை அனுபவித்து கொள்ளலாம்.