விமான டிக்கெட்டை இலவசமாகப் பெற இதை செய்தால் போதும் – ஸ்கூட் அதிரடி சலுகை..!

Scoot offers free tickets, discount vouchers and merchandise in ‘Yellow Converter’ promotion

‘எல்லோ கன்வெர்ட்டர்’ (Yellow Converter) என்ற விளம்பரத்தை ஸ்கூட் விமான நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் இலவச டிக்கெட், தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் பல பொருட்களை உங்களுக்காக ஸ்கூட் நிறுவனம் வழங்க இருக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூரில் ‘தி யெல்லோ கன்வெர்ட்டர்’ என்ற பெயரில் ஒரு விளம்பரத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை விஸ்மா அட்ரியா மாலில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில், மஞ்சள் நிற பொருட்களுக்கு இலவச டிக்கெட்டுகள், $10 முதல் $50 வரை தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் சில பொருட்களை அதிரடி சலுகையாக வழங்க உள்ளது.

ஸ்கூட்டின் முகநூல் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், “நாங்கள் மஞ்சள் நிறத்தை மிகவும் மதிப்பிடுகிறோம், இப்போது அதை நாணயமாக அறிவிக்கிறோம் – விமானங்களுக்கு பணம் செலுத்த இதை நீங்கள் பயன்படுத்தலாம்,” என்று கூறியுள்ளது.

‘Yellow Converter’ க்கு தகுதியான உருப்படிகளில் ஆடை, பயணத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் நகைச்சுவையான அல்லது ஆச்சரியமூட்டும் பொருள்கள் – அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். ஸ்கூட் நிறுவனத்தைப் போன்ற மஞ்சள் நிறங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.