ஷெங் சியோங் (Sheng Siong) சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் நீங்கள் வாங்கும் பொருளுக்கு தள்ளுபடியை அது வழங்கி வருகிறது.
அதன் அனைத்து கடைகளிலும் இந்த தள்ளுபடியை பெற முடியும், ஆனால் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று சிராங்கூன் பகுதியில் இறந்து கிடந்த 28 வயது ஆடவர்; யார் அவர்?
சிங்கப்பூரில் நிலவும் பணவீக்கம் மற்றும் ஜிஎஸ்டி (GST) உயர்வைச் சமாளிக்கவும், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த தள்ளுபடி வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
1 சதவீத தள்ளுபடி வரும் மார்ச் 31, 2023 வரை வழங்கப்படும் எனவும் அது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.
மதுபானம், புகையிலை, வவுச்சர்கள், லாட்டரி மற்றும் குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிப்புகள் தவிர, சிங்கப்பூரில் உள்ள அனைத்து கடைகளிலும் உள்ள அனைத்து பொருட்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.