விமான டிக்கெட் புக்கிங்கிற்கு இவ்வளவு தள்ளுபடியா..? சலுகைகளை அள்ளி கொடுக்கும் ட்ராவல் போர்டல்கள்; விமான பயணிகள் ரெடியா..!

flight
Pic: Reuters

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல நாடுகள் தளர்வு செய்துள்ள நிலையில், விமான போக்குவரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது விமான டிக்கெட் முன்பதிவில் நல்ல சலுகைகளை சில விமான நிறுவனங்கள் மற்றும் டிக்கெட் புக்கிங் இணையத்தளங்கள் வழங்குகின்றன. பல பயண நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களை முன்பதிவு செய்வதன் மூலம் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. சில சலுகைகளைப் பற்றி தற்போது பார்ப்போம்.

என்னாது விமானத்தில் பாம்பா!!! தெறித்த பயணிகள்… பரபரப்புடன் தரையிறங்கிய விமானம்! (வைரல் வீடியோ)

Cleartrip

அமீரகத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பயண நிறுவனமான Cleartrip-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நாட்டு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம். டிக்கெட் முன்பதிவு செய்யும் முன், ஆன்லைனில் பணம் செலுத்தும் போது CTFLY என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை பிப்ரவரி 28, 2022 வரை செல்லுபடியாகும்.

travolook

ICICI வங்கியின் Debit அல்லது Credit கார்டு மூலம் travolook இணையத்தளத்திலிருந்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ஒவ்வொரு முன்பதிவுக்கும் 12 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இது ரூ.2500 வரை இருக்கலாம். முன்பதிவு செய்யும் முன், ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, ​​TICICI குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை இருக்கும்.

EaseMyTrip

EaseMyTrip-ல் உள்நாட்டு அல்லது சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம். உள்நாட்டு விமானங்களுக்கு பல சலுகைகள் உள்ளன. மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் பிற பயணிகள் ரூ.3000 வரை தள்ளுபடியைப் பெற இயலும். இந்த போர்ட்டலில் உள்ள சலுகை 28 பிப்ரவரி 2022 வரை செல்லுபடியாகும். சர்வதேச விமான டிக்கெட் புக்கிங்கில் 5000 ரூபாய் வரை சலுகையை பெறலாம்.

MakeMyTrip

டிராவல் போர்டல் MakeMyTrip-ல், திங்கட்கிழமை தோறும் ICICI வங்கி Credit கார்டுகள், Credit கார்டுகள் EMI மற்றும் Debit கார்டுகளைப் பயன்படுத்தி உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், ரூ.1700 வரை தள்ளுபடி பெறலாம். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது FLYMON என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை மார்ச் 28, 2022 வரை இருக்கும்.

Paytm

HDFC வங்கி Credit கார்டு இருந்து, Paytm மூலம் சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், நீங்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி அல்லது அதிகபட்சமாக ரூ 5000 வரை பெறலாம். அதற்கு INTHDFC என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். இச்சலுகை மார்ச் 30, 2022 வரை செல்லுபடியாகும்.

சிங்கப்பூர் Work permit அனுமதியில் பலே திட்டம்… ஆடவருக்கு சிறை – ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தர தடை!