சிங்கப்பூரின் 200ம் ஆண்டின் “மக்கள் கவிஞரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு..!

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தினர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 60 வது ஆண்டு நினைவு நாளில் அவர்களின் புகழை நினைவு கூறும் வகையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கருத்தரங்கைச் மாறுபட்ட வகையில் சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடத்த இருக்கிறார்கள். மக்கள் கவிஞரின் சிந்தனைகள், கண்ட கனவுகள் சிங்கப்பூரின் வளர்ச்சியோடு எப்படி ஒத்துப் போகிறது, என்று பொருத்திப் பார்க்கும் அழகிய முயற்சியாக இந்த கருத்தரங்கம் அமையுமென கூறப்படுகிறது.

இக்கருத்தரங்கின் முத்தாய்ப்பான நிகழ்வு என்னவெனில் சிங்கப்பூர் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச மற்றும் பாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தரங்கு எதிர்வரும் அக்டோபர் 12 ஆம் தேதி, சனிக்கிழமை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 16ஆவது தளத்தில் (விக்டோரியா தெரு) மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

உங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் மக்கள் கவிஞர் மன்றம் அழைக்கின்றது.