“அனைத்து பயணிகளுக்கும் இலவச ‘in-flight’ வைஃபை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Singapore Airlines

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து பயணிகளுக்கும் அடுத்தாண்டு மார்ச் மாதம் 31- ஆம் தேதிவரை இரண்டு மணிநேர இலவச ‘in-flight’ வைஃபை (Wi-Fi) வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லாரி மூலம் போதைப்பொருள் கடத்தல்: வளைத்து பிடித்த ICA – 24 வயது வெளிநாட்டு ஓட்டுநர் கைது

பொதுவாக வைஃபை suites, முதல் வகுப்பு (First Class) அல்லது வணிக வகுப்பில் (Business Class) பயணிக்கும் பயணிகளுக்கு அல்லது PPS கிளப் உறுப்பினர்கள் (PPS Club Members), Supplementary Cardholders மற்றும் பிரீமியம் பொருளாதாரம் (Premium Economy) மற்றும் எகானமி கேபின்களில் (Economy Cabins) உள்ள KrisFlyer உறுப்பினர்களுக்கு (KrisFlyer members) மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், எந்த கேபினிலும் பயணிக்கும் பயணிகள் இணையத்தைப் பயன்படுத்தவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் (Friends and Family) மெசேஜிங் ஆப்ஸ் (Messaging Apps) மூலம் இணைந்திருக்கவும் இரண்டு மணிநேர இலவச வைஃபையைப் பயன்படுத்த முடியும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது போயிங் 737-800 NG தவிர அதன் அனைத்து விமானங்களிலும் ‘in flight’ இணைப்பு வசதி வழங்கப்படுகிறது.

பணத்தை திருடியதாக பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு சிறை

சலுகை இல்லாமல், மூன்று மணிநேர வைஃபைக்கு பொதுவாக US$15.99 செலவாகும். மற்ற திட்டங்களில் (Other Plans) US$3.99-க்கு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘Chat Apps’- களில் இரண்டு மணி நேர டெஸ்ட் மெசேஜிக்கு (Text Only Messaging) மட்டும் பயன்படுத்தலாம். அதேபோல், 100MB அல்லது 200MB டேட்டா வெப் பிரௌசிங் (Web Browsing), மின்னஞ்சல் (Emails) வசதிகளுக்கு முறையே US$9.99 மற்றும் US$15.99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வைஃபை வசதி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு singaporeair.com என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.