கனடா வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசிய சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலியை (Canadian Foreign Minister Mélanie Joly) இன்று (27/01/2022) காலை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.

‘டோங்கோ நிவாரணப் பணிகளுக்கு 50,000 அமெரிக்க டாலரை வழங்கும் சிங்கப்பூர்’!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று காலை கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியுடன் தொலைபேசியில் பேசியதில் மகிழ்ச்சி. அமைச்சர் ஜோலியும், நானும் முக்கிய பிராந்திய அபிவிருத்திகள் மற்றும் சிங்கப்பூர்- கனடா கூட்டுறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினோம். சிங்கப்பூரும், கனடாவும் சிறந்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் பலதரப்பு மற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பில் நாங்கள் ஒரே எண்ணம் கொண்ட பங்காளிகளாக இருக்கிறோம்.

உக்ரைனுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்!

இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராய அமைச்சர் ஜோலியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம். விரைவில் நேரில் சந்திப்போம் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.