கொலம்பியா, மொரீஷியஸ், டென்மார்க் நாடுகளுக்கான தூதர்களை நியமித்தது சிங்கப்பூர் அரசு!

Photo: Ministry Of Foreign Affairs In Singapore

தூதர்கள் நியமனம் தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (MINISTRY OF FOREIGN AFFAIRS) நேற்று முன்தினம் (11/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், சிங்கப்பூர் அரசு, கொலம்பியா நாட்டிற்கான சிங்கப்பூரின் முதல் குடியுரிமை அல்லாத தூதராக அந்தோனி லிம் வெங் கின் (Anthony Lim Weng Kin as Singapore’s first Non-Resident Ambassador to the Republic of Colombia), டென்மார்க் நாட்டிற்கான சிங்கப்பூரின் தூதராக டான் போ ஹாங் (Tan Poh Hong as Singapore’s next Non-Resident Ambassador to the Kingdom of Denmark) மற்றும் மொரீஷியஸ் நாட்டிற்கான குடியுரிமை அல்லாத தூதராக லிம் மிங் யான் (Lim Ming Yan as Singapore’s next Non-Resident High Commissioner to the Republic of Mauritius) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி தொடர்பில் மோசடி… சிக்கிய ஆடவர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கொலம்பியா நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் முதல் குடியுரிமை அல்லாத தூதர் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அந்தோனி லிம் வெங் கின் டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் (Independent Director at DBS Group Holdings) மற்றும் டிபிஎஸ் வங்கியில் (DBS Bank Independent Director) இயக்குநராக உள்ளார். அதேபோல், அவர் கேபிட்டலேண்ட் (Independent Director at CapitaLand) மற்றும் கேபிட்டலேண்ட் ஹோப் பவுண்டேஷனில் (CapitaLand Hope Foundation) முன்னணி சுதந்திர இயக்குநராகவும் உள்ளார். லிம் டிபிஎஸ், கேபிட்டலேண்ட் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன்ஸ் ஸ்காலர்ஸ் ரெஸ்க்யூ ஃபண்ட் (Scholars Rescue Fund at the Institute of International Education) ஆகியவற்றில் பல குழுக்களில் பணியாற்றுகிறார்.

ஜிஐசி பிரைவேட் லிமிடெட், பேங்கர்ஸ் டிரஸ்ட் கம்பெனி (GIC Private Limited, Bankers Trust Company) மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (Monetary Authority of Singapore) ஆகியவற்றில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். லிம் 1982- ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் (Bachelor of Science from the National University of Singapore) பட்டம் பெற்றார்.

ஜனவரி 15- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

டென்மார்க் நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் தூதர் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

டான் போ ஹாங் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வணிகப் பள்ளியில் (National University of Singapore Business School) இணைப் பேராசிரியராக உள்ளார். அவர் பொதுச் சேவையில் இருந்த காலத்தில், வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிங்கப்பூர் வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Singapore Agri-Food and Veterinary Authority of Singapore) உட்பட பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

அதேபோல், அவருக்கு 1999- ஆம் ஆண்டு பொது சேவை பதக்கம், 2001- ஆம் ஆண்டு NTUC Medal of Commendation மற்றும் 2013- ஆம் ஆண்டு பொது நிர்வாகப் பதக்கம் (தங்கம்) வழங்கப்பட்டது.

டான் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் எஸ்டேட் நிர்வாகத்தில் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) பட்டம் (Bachelor of Science (Honours) in Estate Management from the National University of Singapore) மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (New York University, USA) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (வித்தியாசத்துடன்) பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் 882 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு – மேலும் புதிதாக 797 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

மொரீஷியஸ் நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் தூதர் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

லிம் மிங் யான் சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் உட்பட பல பட்டியலிடப்பட்ட மற்றும் தனியார் நிறுவனங்களின் இயக்குநர் பதவிகளை வகித்துள்ளார். லிம் 2018- ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு கேபிட்டலேண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும், குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

1982- ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் வெளிநாட்டு உதவித்தொகையை (Singapore Armed Forces Overseas Scholarship) பெற்றவர். 1985- ஆம் ஆண்டு UK, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் (University of Birmingham) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் (முதல் வகுப்பு ஹானர்ஸ்). அதைத் தொடர்ந்து, 2015- ஆம் ஆண்டு அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது பல்கலைக்கழகம்.

புதிதாக நியமிக்கப்பட்டு தூதர்கள் அனைவரும், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை நேரில் சந்தித்து, பணி ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.