சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்!

Photo: Rohini Acharya Official Facebook Page

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய ரயில்வேத் துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர்-இந்தியா: PCR தேவையில்லை.. பயணிகளுக்கு இன்பச் செய்தி – ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

பின்னர், லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உயர் தர சிகிச்சைப் பெற ஏதுவாக, அவரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி அவரது குடும்பத்தினர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், அவர் வெளிநாடு செல்லவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவை அவரது குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனையை செய்தனர்.

இந்த நிலையில், லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தனது தந்தைக்கு சிங்கப்பூரில் வசித்து வரும் அவரது மகள் ரோஹிணி ஆச்சார்யா சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தார். இருவருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 5- ஆம் தேதி அன்று லாலுவுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை சிகிச்சை செய்யப்பட்டது.

ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண வரும் பக்தர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!

எனினும், தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மருத்துவக் கண்காணிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காவும், சிங்கப்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிங்கப்பூரில் இருந்து இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினார். அங்கு உள்ள தனது இளைய மகள் வீட்டில் ஓய்வெடுத்த லாலுவை பின்னர், விமானம் மூலம் தனது சொந்த ஊரான பாட்னாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.