சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: ராமகிருஷ்ணா மிஷன் இந்திய தூதரகத்துடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

Photo: Swami Vivekananda

சுவாமி விவேகானந்தரின் 160- வது பிறந்தநாள் இன்று (12/01/2022) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள், இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உஷாரா இருந்தா பொழைச்சுக்கலாம்.. சிங்கப்பூர் வாடகை வீடுகளில் செலவை மிச்சப்படுத்த கையாளப்படும் தந்திரம்!

அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் இன்று (12/01/2022) பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் (Ramakrishna Mission) இந்திய தூதரகத்துடன் (High Commission Of India, Singapore) இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ராமகிருஷ்ணா மிஷன், சாரதா ஹாலில் (Sarada Hall) நடைபெறும் நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீ சந்திரநாத் பட்டாச்சார்யா (Sri Chandranath Bhattacharya), சுசேதா பட்டாச்சார்யா (Smt Sucheta Bhattacharya), ஸ்ரீ ரிட்விக் கோஷல் (Sri Ritwik Ghosal) உள்ளிட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இன்று (12/01/2022) மாலை 07.45 PM மணி முதல் மாலை 08.45 PM மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடும் வாக்குவாதம்.. மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இணையதளம் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். ஒரு பதிவில் ஒருவர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

https://tinyurl.com/SV12Jan2022 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாமல் இருக்கும் சுமார் 48,000 ஊழியர்கள்

நிகழ்ச்சியில், இந்திய தூதரகத்தின் உயரதிகாரிகள், ராமகிருஷ்ணா மிஷனின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.