சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 852 கிராம் தங்கம் பறிமுதல்!

Photo: Chennai Customs Official Twitter Page

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு நுழையும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே, வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

“ஜிஎஸ்டி உயர்வு அடுத்தாண்டு ஜன.1- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரலாம்”- பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!

அந்த வகையில் இன்று (17/01/2022) சென்னைக்கு சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மூன்று பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 4 தங்கப் பசை பொட்டலங்களை மலக்குடலில் வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தைப்பூசம்- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

அவற்றின் மொத்த எடை 951 கிராம். அதில் இருந்து 852 கிராம் தங்கத்தைப் பிரித்தெடுத்து, அவற்றை முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 37.88 லட்சம் என்று சென்னை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டது. இந்த தங்க கடத்தல் குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றன.