துவாஸ் சவுத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Tuas South warehouse fire workers injured
Photo: SCDF/ Facebook

மார்ச் 13- ஆம் தேதி அன்று மாலை 06.15 PM மணிக்கு சிங்கப்பூரில் உள்ள 28 துவாஸ் சவுத் அவென்யூ- 8ல் (28 Tuas South Avenue 8) அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 26 அவசரகால வாகனங்களுடன், சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

பெண்ணை தந்திரமாக ஏமாற்றி, அதனை வீடியோ எடுத்து கணவனுக்கு அனுப்பி மிரட்டிய சிங்கப்பூர் ஆடவர்

அதைத் தொடர்ந்து, எட்டு வாகனங்களில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆளில்லா தீயணைப்பு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்து, அதனை ஆறு அறைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்து சேமிப்பு அறைகளுக்கும் பரவியதால், அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

ஆறு மாடிகளுக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர், நீண்ட நேரத்திற்கு பின் இரவு 08.15 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேருக்கு கைகள் மற்றும் நெற்றியில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதிய வாடகை 100 சதவீதம்.. பழைய வாடகை 75% உயரும் – செலவு மிகுந்த நகரமாக மாறும் சிங்கப்பூர்

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.