‘புலம்பெயர்ந்தோர் உலகத்தமிழர் நாள்’- பெருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் பதிவுச் செய்யலாம்!

Photo: TN GOVT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம்பெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12- ஆம் தேதி அன்று ‘புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக’ கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வரும் 12/01/2022 மற்றும் 13/01/2022 ஆகிய இரண்டு நாட்கள் ‘புலம்பெயர்ந்தோர் உலகத்தமிழர் நாள்’ சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் இணையதள சேவை தொடக்கம்!

இதற்கான நிகழ்ச்சி நிரல் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம் பெயர் தமிழர் நல வாரியம்” மற்றும் 24*7 இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம் துவக்கி வைத்தல். உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல். புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, இலக்கண/இலக்கியம், வரலாறு, ஆய்வுரைகள், கட்டுரைகள் வெளியிடுதல். ‘தமிழ் இணையக்கல்வி கழகத்தின்’ மூலம் தமிழ் கற்றல்/ கற்பித்தல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் மற்றும் புலம்பெயர்ந்த உலகத்தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வி துறையில் குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயிலுதலில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் (நேரடி/தொலைதூர கல்வி) உள்ள வாய்ப்புகள் தொடர்பான அமர்வு.

சிங்கப்பூரில் மேலும் 454 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

‘தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்’ மூலம் இவ்விழாவில் பங்கேற்கும் சர்வதேச தமிழ் சமூகத்தை, அவர்கள் விரும்பும் நிலையில் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தருதல். நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் மற்றும் திரைப்பட பாடல்கள் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, ‘தாய் மண்’ என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல். இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ளவும், இணைய வழியில் கண்டுகளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ION ஆர்ச்சர்ட் மாலில் உள்ள கை உலர்த்தி இயந்திரத்தை பயன்படுத்திய சிறுமியின் விரல் துண்டிப்பு

விழாவிற்கு நேரடியாக பங்கேற்க விரும்புவோர் https://nrtreg.xenovex.com/register/2 என்ற இணைய தள பக்கத்திற்குள் சென்று தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண்கள், தொலைபேசி எண்கள், தற்போது நீங்கள் பணிபுரிந்து வரும் நாட்டின் பெயர், தமிழ்நாட்டில் உள்ள உங்கள் வீட்டின் முழு முகவரி, உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு பதிவுச் செய்ய வேண்டும்.

அதேபோல், இணைய வழி மூலம் விழாவில் பங்கேற்க விரும்புவோர் https://nrtreg.xenovex.com/register/1 என்ற இணைய தள பக்கத்திற்குள் சென்று முழு விவரங்களைக் குறிப்பிட்டு பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.