வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு சிங்கப்பூர் கண்டனம்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்ஜினில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லண்டனுக்கு திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று (26/03/2022) வெளியிட்டிருந்த அறிக்கையில், “மார்ச் 24- ஆம் தேதி அன்று வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதை சிங்கப்பூர் கண்டிக்கிறது. ஏவுகணை சோதனையால் கொரிய தீபக்கற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியுள்ளது. அதேபோல், கடந்த 2018- ஆம் ஆண்டு வடகொரியாவுக்கு அணு ஆயுதங்கள் மற்றும் அதன் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தவற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடையை மீறியுள்ளது.

அனைத்து ஆத்திரமூட்டும் செயல்களையும் உடனடியாக நிறுத்துமாறும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நடக்கும்படி வடகொரியாவை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 13 பேர் உயிரிழப்பு – 28 பேர் ICU பிரிவில்…

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையும் கண்டனம் தெரிவித்திருந்தது.