10, 14, 16, 70M, 196 பேருந்து சேவைத் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

Photo: SBS Transit

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd). இந்த நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றன.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவை’- ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

இந்த நிலையில் 10, 14, 16, 70M, 196 ஆகிய பேருந்து சேவைத் தொடர்பாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் மார்ச்- 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘MetaSprint Series Duathlon 2022’ நடைபெறவிருப்பதால், நிகோல் நெடுஞ்சாலையில் உள்ள சாலை அதிகாலை 03.30 AM மணி முதல் காலை 10.00 AM மணி வரை மூடப்படும்.

இந்த நேரத்தில் நீங்கள் சேவைகள் 10, 14, 16, 70M மற்றும் 196ஐப் பயன்படுத்தினால், இந்தச் சேவைகள் நிகோல் நெடுஞ்சாலையில் (Nicoll Highway) இரண்டு பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நிகோல் நெடுஞ்சாலையில் உள்ள நிகோல் ஹைவே ஸ்டேஷன் (Nicoll Highway Station), நேஷனல் ஸ்டேடியம் (National Stadium) ஆகிய பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும்.

அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்!

மிடில் சாலை (Middle Road), பீச் சாலை (Beach Road), கிரவ்போர்ட் தெரு (Crawford Street), கல்லாங் சாலை (Kallang Road) வழியாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேருந்துகள் இயக்கப்படும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு www.sbstransit.com.sg (அல்லது) 1800- 287- 2727 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.