சைக்கிள் பார்க்கிங் வசதிகளாக மாற்றப்படும் நகர மத்திய சாலையோர பகுதிகள்

நகர மையத்திற்குச் செல்லும் மிதிவண்டி ஓட்டுபவர்கள் இனி அவற்றை நிறுத்துமிடம் குறித்து வருத்தப்பட அவசியமில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

ஊட்ரம் மற்றும் தெலுக் ஆயர் போன்ற பகுதிகளில் சாலையோரம் அமைந்திருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு சில பகுதியை மிதிவண்டி நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கடை விலை: வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்

கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் கிளப் ஸ்ட்ரீட்டில் அமைந்திருக்கும் இரண்டு கார் நிறுத்துக்குமிடங்களை மிதிவண்டி நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு சில இடங்களில் கார் நிறுத்துக்குமிடங்கள் மிதிவண்டி நிறுத்துவதற்காக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) மொத்தம் 100 புதிய மிதிவண்டி நிறுத்தும் இடங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்படியும் ஒரு தாய்… நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை..!