S$1,000 நினைவு பண நோட்டை பெற ஓர் அரிய வாய்ப்பு – இப்போதே முந்துங்கள்

1000-notes-souvenirs

S$1,000 நோட்டை நீங்கள் பார்த்ததே இல்லை அல்லது அரிதாகவே பார்த்திருந்தால் அதை பெறுவதற்கு உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

சிங்கப்பூரின் S$1,000 நினைவு நோட்டை Singapore Mint அறிமுகப்படுத்தியுள்ளது. அது தங்கம் மற்றும் வெள்ளி வடிவமைப்பில் வரலாற்று நினைவாக வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் 2021 ஜனவரி 1 முதல் S$1,000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது, இருப்பினும் புழக்கத்தில் உள்ள நோட்டுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்.

நினைவு பண நோட்டுகள் 0.5 கிராம் 999 ஃபைன் தங்கம் அல்லது 6 கிராம் 999 ஃபைன் வெள்ளி ஆகியவற்றில் பூசப்பட்டு நான்கு வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.

வெள்ளி நோட்டு ஒன்றின் விலை S$58 என்றும், தங்க நோட்டுகள் ஒன்று S$158 என்றும் கூறப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் Singapore Mint இணையதளத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.