101 வயதிலும் உழைத்து உண்ணும் சிங்கப்பூரின் இரும்பு பெண்மணி – உழைக்கும் வர்க்கத்துக்கு ஓர் அழகிய எடுத்துக்காட்டு

Singapore woman, 101, sells snacks & toys at Beauty World Centre
@bibipew/TikTok

Singapore Trending: தன்னுடைய 101வது வயதிலும் உழைத்து உண்ணும் சிங்கப்பூரின் இரும்பு பெண்மணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பியூட்டி வேர்ல்ட் சென்டரின் அடித்தளத்தில் அவரின் Lean Seng Lee Trading Centre கடை அமைந்துள்ளது. தள்ளாத வயதிலும் உழைக்கும் இரும்பு பெண்மணி குறித்து செய்திகள் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்

TikTok பயனர் @bibipew என்பவர் இது குறித்து கூறுகையில், மூதாட்டியின் கடையில் குழந்தைகளுக்கான பொம்மைகள், ஹெட் கிளிப்புகள், பானங்கள், மிட்டாய்கள், தின்பண்டங்கள் மற்றும் போகிமொன் அட்டைகள் விற்கப்படுவதாக கூறினார்.

இதனை கண்ட பலர் அவர் குறித்து ஆச்சரியத்தையும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அவர் மட்டுமே அந்த கடையை நடத்துவதாகவும், எப்போதாவது அவர் மகன் வந்து உதவி செய்வார் என்றும் ஒருவர் கூறினார்.

Lean Seng Lee Trading Centre

B1-25 பியூட்டி வேர்ல்ட் சென்டர்,
144 அப்பர் புக்கிட் திமா சாலை,
சிங்கப்பூர் 588177.

திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை