101 வயது மூதாட்டியை அறைந்த பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

JUDGEMENT

மூதாட்டியை அறைந்த பணிப்பெண்ணுக்கு (Domestic Worker) சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் FDI-யில் 27.01 சதவீத பங்களிப்போடு சிங்கப்பூர் முதலிடம் – அந்நிய முதலீட்டின் வளர்ச்சி

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர் நிகாய்சா (Ngaisah) (வயது 48). இவர் சிங்கப்பூரில் லோரோங் ஆ சூ (Lorong Ah Soo) பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் 101 வயது மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்துள்ளார். குறிப்பாக, மூதாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். குறிப்பாக, உணவுக் கொடுத்தல், மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக அதே வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார் நிகாய்சா. இந்த நிலையில், பணிப்பெண்ணின் செயல்பாடுகளைக் கண்காணிக்க கடந்த ஏப்ரல் மாதம் 26- ஆம் தேதி அன்று மூதாட்டியின் குடும்பத்தினர், அவர் வசிக்கும் வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். அதைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், அந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினரிடம் வழங்கி புகார் அளித்துள்ளார்.

சிங்கப்பூருக்குப் புதிதாய் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எல்லாமே முதலாளிகள் செலவு!

அந்த சிசிடிவியில் பதிவான காட்சியில், கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில், வீட்டில் இருந்த சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தார். அவர் அருகே பணிப்பெண் அமர்ந்து மூதாட்டிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மூதாட்டியை நெருக்கமாகப் பிடித்த பணிப்பெண், மூதாட்டியின் கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், மூதாட்டி வலியின் காரணமாக, கன்னத்தைத் தடவியுள்ளார்.

மூதாட்டிக்கு பணிப்பெண் வலுக்கட்டாயமாக உணவளித்தார். அதைத் தொடர்ந்து, சுமார் அரைமணி நேரம் கழித்து, மருந்துகளை உட்கொள்ளவும், பிளாஸ்டிக் கோப்பையில் இருந்த தண்ணீரைக் கொடிக்கவும் உதவினர்.

அதன் தொடர்ச்சியாக, மூதாட்டியின் தலையில் கிண்ணத்தைக் கொண்டு அடித்துள்ளார். வலி காரணமாக, பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது நெற்றியைத் தடவியதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஜூலை 31- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை!

இது குறித்து பணிப்பெண் நிகாய்சா மீது இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (29/07/2022) நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, இந்த சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூதாட்டியை அடித்ததை பணிப்பெண் ஒப்புக் கொண்டனர். அத்துடன், தனது தவறுக்கு வருந்துவதாகவும், தமக்கு குடும்பம் இருப்பதால் மன்னிப்புக் கோருவதாகவும் நீதிபதியிடம் பணிப்பெண் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை நிராகரித்த நீதிபதி, பணிப்பெண்ணுக்கு எட்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மூதாட்டி, தனக்கு என்ன நடந்தது? என்று மருத்துவக் ஊழியர்களிடம் கூற முடியவில்லை. எனினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர், ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.