சிங்கப்பூரில் லாஸரஸ் தீவில் கூட்டம் போட்ட 12 பேர் மீது வழக்கு..!

12 people to be charged for flouting Covid-19 rules on Lazarus Island
Pic: Singapore Island Cruise

சிங்கப்பூரில் உள்ள லாஸரஸ் தீவில் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை பின்பற்றாத 12 நபர்கள் மீது நீதிமன்றத்தில் இன்று (02-10-2020) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களில், 5 பேர்  பெண்கள் மற்றும் 7 பேர் ஆண்கள் அடங்குவார்கள். இவர்களில் 10 பேர் பிரிட்டிஷ் குடிமக்கள், ஒருவர் சிங்கப்பூரர், மற்றொரு நபர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள லாஸரஸ் தீவுக்குச் சென்றதாகவும், காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவர்கள் அந்த தீவில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் மியான்மருக்கு மருத்துவ பொருட்கள் உதவி..!!

மேலும், இவர்கள் மீது ஒரே வீட்டில் தங்காத நான்கிற்கும் மேற்பட்டோருடன் சமூக ஒன்றுகூடலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தை இவர்களில் ஒருவர் ஒப்புக்கொண்டார் எனவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தற்காலிகக் கட்டுப்பாடுகளின் கீழ், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 6 மாதச் சிறைத்தண்டனை அல்லது S$10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 60 வருடங்களாக தையல் தொழில் செய்து வருபவர், தற்பொழுது வாடகை கொடுக்கவே சிரமப்படுகிறார்..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…