ஆசியான் பாரா போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வரும் சிங்கப்பூர் வீரர்கள்…. நீச்சல், தடகளத்தில் அசத்தல்!

Photo: Singapore National Paralympic Council/ Player: Toh Wei Soong

 

 

12வது ஆசியான் பாரா போட்டிகள் (12th ASEAN Para Games) இன்று (ஜூன் 03) கம்போடியா நாட்டின் தலைநகர் ப்னோம் பென் (Phnom Penh) நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், புரூணை, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், ஈஸ்ட் திமோர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்

முதன்முறையாக, ஆசியான் பாரா போட்டிகளை கம்போடியா தலைமையேற்று நடத்தி வருகிறது. ஜூன் 03- ஆம் தேதி முதல் ஜூன் 09- ஆம் தேதி வரை ஆசியான் பாரா போட்டிகள் நடைபெறவுள்ளது.

Singapore National Paralympic Council/ Player: Muhammad Diroy Bin Noordin

இன்று (ஜூன் 07) நடைபெற்ற நீச்சல் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர் டோ வேய் சூங், இரண்டு பிரிவுகளில் நடந்த 50 மீட்டர் போட்டியில் பங்கேற்று, முறையே 30.78 மற்றும் 29.22 வினாடிகளில் இலக்கை அடைந்து சாதனைப் படைத்துள்ளார். அத்துடன், இரண்டு தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை செய்து சிக்கிய ஊழியர் – கைது செய்த போலீஸ்

குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீரர் முகமது டிரோய் நூர்டின் (Muhammad Diroy Noordin) தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல், தடகளப் போட்டியின் 200 மீட்டர் ஆடவர் பிரிவில் பங்கேற்ற சிங்கப்பூர் வீரர் ஜேம்ஸ் எதான் அங் காய் மெங் (James Ethaan Ang Kai Meng), 23.33 வினாடிகளில் இலக்கை அடைந்து, வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

Singapore National Paralympic Council/ Player: James Ethan Ang

பதக்கப் பட்டியலில் சிங்கப்பூர் அணி, 10 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 35 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.