‘சூடானில் இருந்து 14 சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்’- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Photo: ChowmingW/Twitter

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதன் காரணமாக, சூடானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மே 3- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களைப் பாதுகாப்பாக மீட்க, தங்களது தூதரகங்கள் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சூடான் நாட்டின் கார்ட்டூமில் சிக்கித் தவித்த இரண்டு சிங்கப்பூர் குடும்பங்கள் உள்பட 14 சிங்கப்பூரர்கள், அங்கிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் மலேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அரசுகளின் உதவியுடன் மலேசியர்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாகம்!

சூடானில் மோதல் வெடித்ததில் இருந்து, சூடானில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக உதவிகளை வழங்கி, அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ரியாத் (Riyadh) மற்றும் அபுதாபியில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களும், ஜெட்டாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகமும், சிங்கப்பூர் குடும்பங்கள் கார்ட்டூமில் (Khartoum) இருந்து ஜெட்டாவுக்குப் புறப்படுவதற்கு வசதியாக, அரசாங்கங்கள் மற்றும் மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றின.

சிங்கப்பூர் அரசாங்கம், மலேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு நமது குடிமக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உதவியதற்காக ஆழ்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறது. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.