சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 70 பேர் கைது..!

15-year-old boy arrested after selling drugs to 14-year-old girl; CNB blitz nabs 70 suspects in total (PHOTOS: CENTRAL NARCOTICS BUREAU)

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 15 வயது சிறுவர் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிடோக், சுவா சூ காங், தெம்பனிஸ், யீஷுன் ஆகிய வட்டாரங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட அந்த 15 வயது சிங்கப்பூரர், ஐஸ் வகையிலான போதைப்பொருளை 14 வயதுப் பெண்ணிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், $71,000 மதிப்புள்ள மருந்துகள் கைப்பற்றப்பட்டன, இதில் 9 கிராம் புதிய மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருட்கள், 20 கிராம் ஹெராயின், 704 கிராம் ஐஸ் மற்றும் ஒரு எக்ஸ்டஸி டேப்லெட் ஆகியவை அடங்கும்.

சிறுவனிடம் இருந்து போதைப்பொருளை வாங்கிய அந்த பெண் போதைக்கு அடிமையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.