’15 வயது சீன பெண்ணை காணவில்லை’- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அக்டோபர் 29- ஆம் தேதி அன்று அதிகாலை 03.21 AM மணி முதல் சிங்கப்பூரில் வசித்து வந்த 15 வயது சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணை காணவில்லை. இவர் கடைசியாக, கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road), நீளம் கொண்ட வெள்ளை நிற ஹூடி (Oversize White Colored Hoodie) அணிந்திருந்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!

இவரை யாரேனும் பார்த்தாலோ, இவரைப் பற்றி தகவல் கிடைத்தாலோ உடனடியாக, சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்புக் கொள்ளலாம்” என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இண்டிகோ விமான என்ஜினில் தீ…. அவசர அவசரமாக பயணிகள் வெளியேற்றம்!

மேலும், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ட்விட்டர் பதிவில் காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் காவல்துறை பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.