இரண்டாவது முறையாக காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தது காவல்துறை!

Photo: Singapore Police Force

சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வரும் நுஸ்ரா முஸ்பிரா பிண்டே நஜிம் (Nusra Musfira Binte Nazim) என்ற 15 வயது மலாய் சிறுமி இரண்டாவது முறையாக காணவில்லை. இந்த சிறுமி டிசம்பர் 16 ஆம் தேதி முதல் காணவில்லை. அவர் கடைசியாக, தியோங் பாரு எம்ஆர்டியில் (Tiong Bahru MRT) காணப்பட்டார். கருப்பு சட்டை (Black Shirt) மற்றும் சிவப்பு நிற ஜீன்ஸ் உடை (Red Jeans) அணிந்திருந்தார். அந்த சிறுமியைக் கண்டால் ‘999’ என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை” காவல்துறை கேட்டுக் கொண்டிருந்தது.

“இந்தியாவுக்கு ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் மீண்டும் இயக்கப்படும்”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இந்த நிலையில். சிறுமியை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சிறுமியைப் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காவல்துறை, “சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார். உங்கள் உதவிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.

சிறுமியை இரண்டாவது முறையாக பத்திரமாக மீட்ட சிங்கப்பூர் காவல்துறைக்கு பொதுமக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் குறைவான மழை மற்றும் காற்று வீசும்

இதே சிறுமி கடந்த நவம்பர் மாதம் 28- ஆம் தேதி காணாமல் போனார். கடைசியாக, தியோங் பாருவில் உள்ள பியோ கிரசண்ட் (Beo Crescent in Tiong Bahru) காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, டிசம்பர் 8- ஆம் தேதி அன்று காலை 11.31 AM மணியளவில் சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.