சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 18 பேர் இறந்துள்ளதாக அறிவிப்பு

Pic: Today/File

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை திருத்தம் செய்து சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் திருத்தத்திற்குப் பிறகு, சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தொற்றுநோயால் மேலும் பதினெட்டு இறப்புகள் ஏற்பட்டதாக அதன் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் சலுகை வழங்கியதா? – அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் கிருமித்தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 803 இல் இருந்து 821 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவகம் கடந்த ஆண்டு அதன் அறிக்கையை இறுதி செய்த பிறகு வருடாந்திர இறப்பு எண்ணைக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் COVID-19 இறப்புகள் குறித்து சுகாதார அமைச்சகத்துக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

“மருத்துவர்களின் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், MOH ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் COVID-19 இறப்புகளின் எண்ணிக்கையை வெளியிடுகிறது,” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்னாச்சு இவர்களுக்கு… பொது வெளியில் சிறுநீர் கழித்த பெண் – கடுப்பான மக்கள்