சிங்கப்பூர் விமானநிலையத்தில் பரபரப்பு – கூண்டில் இருந்து எஸ்கேப் ஆன சிங்கங்கள்!

ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் அவை அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வெளியே வந்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இறுதியில் இரண்டு சிங்கங்களும் டிரான்குவிலைசர் துப்பாக்கியால் சுடப்பட்டு, மாண்டாய் வனவிலங்கு குழுவின் பராமரிப்பில் மயக்க நிலையில் இருந்து மீண்டு வருகின்றன. சம்பவம் எந்த நேரத்தில் நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை.

விமான சேவைக்கு இடையூறு இல்லை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிக்கலை எதிர்கொண்ட பிறகு விலங்குகள் பராமரிப்புக் குழுக்களை அழைத்தது. மொத்தம் ஏழு சிங்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவை எங்கு சென்றன என்பது தெரியவில்லை. சிங்கங்கள் எங்கிருந்து வந்தன என்பதும் தெரியவில்லை. சிங்கங்கள் கன்டெய்னரை உடைத்து வெளியே வந்தாலும் விமான சேவையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

சிங்கங்கள் அடக்கப்பட்டன

சிங்கங்கள் கூண்டைவிட்டு வெளியே வந்த போதிலும், கொள்கலனைச் சுற்றி பொருத்தப்பட்ட பாதுகாப்பு வலைக்குள் இருந்தன. நல்வாய்ப்பாக 2 சிங்கங்கள் மட்டுமே எஸ்கேப் ஆனது. 7 சிங்கங்களும் தப்பியிருந்தால் விமான நிலையத்திலேயே பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். தப்பிய 2 சிங்கங்களில் அதன் கூண்டின் மேலேயே படுத்திருந்தது. இருப்பினும் சிங்கம் கூண்டில் இருந்து தப்பியிருந்தாலும் கூட, முழு நேரமும் அவை கண்டெய்னரை சுற்றிப் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வலைக்குள் இருந்தன என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் விமானச் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை.