சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட இருவர்… சீன போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள்

2-men-wanted-in-china-arrested-singapore

தீவு முழுவதும் பண மோசடி தொடர்பிலான சோதனையில் கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களில் இருவர் சீன போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த மோசடிகளில் அவர்கள் சிங்கப்பூரில் மட்டும் 1 பில்லியனுக்கும் அதிகமான பணம், பொருட்கள் மற்றும் சொத்துக்களை ஈட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சீனாவால் தேடப்படும் அவர்களில் ஒருவர் துருக்கிய நாட்டவர் வாங் சுமிங் (42) மற்றும் இன்னொருவர் சென் கிங்யுவான் (33) கம்போடியா நாட்டவர்.

அவர்கள் இருவரும் புஜியன் கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது.

டாங்லின், பிஷப்ஸ்கேட் பகுதியில் உள்ள குட் கிளாஸ் பங்களாவில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வாங் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 10 மில்லியன் யுவான் (S$1.88 மில்லியன்) கைப்பற்றப்பட்டது.

River Valley பகுதியில் உள்ள லியோனி ஹில் சாலையில் உள்ள காண்டோமினியத்தில் சென் கைது செய்யப்பட்டார்.

பணமோசடி செய்ததாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. விமான நிலையத்தை கிடுகிடுக்க வைத்த பயணி – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்