COVID-19 கட்டுப்பாடுகளை மீறி உபசரிப்பு சேவை: 20 பெண்கள் கைது.!

20 women nabbed suspected
Pic: Google Maps

சிங்கப்பூரின் KTV குழுமம் பெரிய கிருமித்தொற்று குழுமமாக மாறிவரும் சூழ்நிலையில், மூன்று KTV கரவோக்கே நிலையங்களில் உபசரிப்புச் சேவையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில், 20 பெண்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

COVID-19 சட்ட விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண்கள் 20 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இளையரின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா ? – குழப்பங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம்

South Bridge சாலை, Selegie சாலை மற்றும் Geylang சாலை ஆகியவற்றில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 20 பெண்கள் தென் கொரியா, மலேசியா, தாய்லந்து, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்தவர் ஆவார்கள், மேலும், அந்த மூன்று KTV நிலையங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் இடம்பெற்றனவா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் COVID-19 விதிமுறைகள் மீறுபவர்களுக்கு 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கபட்டலாம்.

வெளிநாட்டு பணிப்பெண்களை சிங்கப்பூர் வரவழைக்க புதிய முன்னோடித் திட்டம்.!