புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Photo: Hindu Endowments Board

 

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, இன்று (செப்.30) அதிகாலை 05.00 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகங்களும், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அத்துடன், பசுமாடு மற்றும் கன்றுக்கு கோமாதா பூஜையும் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் திரு.லீ குவான் இயூவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து 10 ஆண்டுகளாக பேனர் வைக்கும் தமிழர்!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் நேரலைச் செய்யப்பட்டது.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
Photo: Hindu Endowments Board

அதிகாலை சுப்ரபாதம் தரிசனம் செய்யவும், பூஜைகளை காணவும் 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்து, பூஜையில் கலந்து கொண்டனர்.

அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.