‘ஹே கத்தியை எடு’… என்று லிட்டில் இந்தியாவில் அடித்துக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 3 பேர் கைது

3 arrested over fight at little india
Stomp

லிட்டில் இந்தியாவிலுள்ள கிளைவ் ஸ்ட்ரீட்டில் புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) நடந்த சண்டையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்று இரவு 11.26 மணியளவில் சம்பவ இடத்தில் இருந்த ஸ்டோம் நிரூபர், வாக்குவாதத்தில் ஈடுபடும் பெரிய குழு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

“ஓமிக்ரான் அலை நெருங்கிவிட்டது, அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – அமைச்சர் ஓங்

வீடியோவில், பல ஆண்கள் கருப்பு சட்டை அணிந்த ஒருவரை நோக்கி தாக்குவதை காணலாம். அவர் ஓட முயற்சிக்கும் போது அவர்கள் அவரைத் துரத்தி தாக்குவதையும் காணமுடிகிறது.

மேலும், வெள்ளை உடை அணிந்த மற்றொரு ஆடவர் மீது மற்றவர்கள் பானை செடி உள்ளிட்ட பொருட்களை வீசுவதையும் காணலாம்.

அதில் ஒருவர், ‘ஹே கத்தியை எடு’ என்று சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதன் பின்னர், ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அன்று இரவு 11.28 மணிக்கு சண்டை குறித்து தகவல் கிடைத்தாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 27 வயதுடைய ஆடவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு