இஸ்ரோ விண்ணில் செலுத்திய 3 செயற்கைக்கோள்களை வடிவமைத்த தமிழர்!

இஸ்ரோ விண்ணில் செலுத்திய 3 செயற்கைக்கோள்களை வடிவமைத்த தமிழர்!
File Photo

 

இஸ்ரோ விண்ணில் செலுத்திய மூன்று செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநராக, அரியலூரைச் சேர்ந்த நபர் பணியாற்றியுள்ள நிலையில், அவரது இளம் வயது கனவு நனவாகியுள்ளதாக பெற்றோர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் கூழ் பூஜை!

விண்ணில் ஏவப்பட்ட PSLV-C56 ராக்கெட்டில் சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சண்முகசுந்தரம் வடிவமைத்த மூன்று நானோ செயற்கைக்கோள்களும், அடங்கும். ARCADE, VELOX-AM, SCOOB-II ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளார்.

இவரது சொந்த ஊர், தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், அய்யப்ப நாயக்கன் பேட்டை ஆகும். சண்முகசுந்தரம் வடிவமைத்த செயற்கைக்கோள்கள், விண்ணில் ஏவப்பட்டதால், அவரது பெற்றோருக்கு கிராம மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- பயணக் கட்டணம் எவ்வளவுத் தெரியுமா?

விண்ணில் ஏவப்பட்ட PLSV-C56 ராக்கெட்டில், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘DS-SAR’ பிரதான செயற்கைக்கோள் மற்றும் ஆறு சிறிய செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலைநிறுத்தி, அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.