“53 வயது நபரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"53 வயது நபரை காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் வசித்து வந்த 53 வயது நபரைக் காணவில்லை; அவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ATM இயந்திரத்தில் பணத்தை எடுக்காமல் சென்ற ஆடவர்.. காணாமல் போன பணம் – போலீஸ் விசாரணை

இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 53 வயது நபரை நவம்பர் 17- ஆம் தேதி முதல் காணவில்லை. அவர் கடைசியாக, புளோக் 424பி ஈசூன் அவென்யூ 11- ல் (Blk 424B Yishun Ave 11) இருந்துள்ளார். இவர் நீல நிற டீ ஷர்ட்டையும், கருப்பு நிற நீல பேண்டையும் அணிந்திருந்துள்ளார்.

தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் நிறுத்தப்படவுள்ள சில பேருந்து சேவைகள் – பயணிகள் அதிருப்தி

இவரை யாரேனும் பார்த்தோலோ (அல்லது) இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக, 999 என்ற சிங்கப்பூர் காவல்துறையின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.